சந்த கவி இலக்கம்__64
“பொருளாதாரம்
வீழ்ச்சி”
விழித்தெழும் உலகம்
விந்தை காட்டும் அரச குடும்பம்
பொருளாதார வீழ்ச்சி
பொருண்மியம்
அடித்து நொருக்கப்பட்டதே!!
இலங்கை நிலவரத்தை தை
உற்று நோக்கிய ஐரோப்பியர்
இலங்கைக்கு புறப்பிட வேண்டாம்
புறக்கணித்து விடுங்கள்
புண் முறுவலுடன் சொல்லினம்!!
நாமும் விடுமுறையை குதுகலிக்க
நாட்டுக்கு போகாவிடில்
அன்னிய செலாவணி வீழ்ச்சியே!!
பொருளாதார
நெருக்கடியை சந்திப்பது
இது தான் முதல் தடவை அல்ல தமிழர்கு
முப்பது ஆண்டுகளாக
முட்டுப்பட்டு வாழ்ந்த சமூகம்
சந்ததி காக்க ஓடிவந்தே
புகலிடம் கோரி
நின்றோம்
பூரிப்புடன் வாழ்கின்றோம்!
நன்றி
வணக்கம்
23.04.22