சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__60
“துவிசக்கர வண்டி”

இரண்டு சில்லு வண்டிதனில்
இயன்ற வரை சென்று
பள்ளி படிப்புதனை முடித்து
பக்குவமாய் வந்திடுவோம்!!

கூப்பிடு தூரத்துக்கும்
கூச்சல் போட்டு கூப்பிடினம்
மோட்டார் வண்டி வேண்டுமாம்
மோகனா சொல்லுகிறாள்!!

இனிமேல் இவையள்
என்ன செய்ய போகினம்
எமாந்து போச்சினம்
பக்குவமாய் எடுத்து சொன்னால்
பார்த்து கேட்டு நடக்கணும்!!

வீடுகளில் மிதிவண்டி இல்லையாம்
வீதியில் ஓடவும் முடியாதாம்
வீதி விபத்து வந்திடுமாம்
விந்தை வேறு காட்டினம்!!

ஆரம்பத்தில் எப்படி வாழ்ந்தோம்
அத்திவாரம் போட்டு காட்டுதே
காலமும் நேரமும் மாறும்
கண் கலங்காதே கண்மணியே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
25.03.22