சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__59
“பணி”

முதியோர் இல்லமதில்
மூத்தோரை பாதுகாத்து
முழுநிலவாய் ஒளிகொடுத்து
முளித்திருக்கும்
தாதியவள்!!

கண்ணுள் எண்ணொய் விட்டது போல்
காத்திருந்து கண்ணயராது
மருந்து மாத்திரை கொடுத்திடுவாள்

உடல் தேத்து குளிப்பாட்டி
உட்கார்ந்து தலைவாரி
உடை போட்டு அழகுபார்த்து
உணவும் ஊட்டிடுவாளே!!

காலநேரம் பார்க்காமலே
கண்ணியமென செய்தருளும்
பணி பணி
பாதுகாக்கும் மகளவளே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்