சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__56

“இசையும் மனிதனும்”

இசை ஒலி வழி புகுந்து
இதய நாடியினை தழுவி
உயிரினங்களை இசையால்
நனைய செய்யுமே
கற்றோரும் மற்றோரும் இசைவயப்படுவரே கல்மனதையும் கரைத்தெடுக்குமே !!

இசைதனை இளவயதில் கற்றிடு
இயன்ற வரை மற்றவருக்கும் கொடுத்திடு
இன்னிசையை வியாபாரம் ஆக்கிடாதே
கலைகள் மகிழ்ச்சியை தருவனவே கவலையை போக்கிடுமே
இசையை கேட்கவும் றசிக்கவும் நேரக்கட்டுப்பாட்டை கட்டுக்குள்
போட்டிடு
நாட்கணக்காக கேட்டால் நாட்டம் வராது
நட்டம் வந்திடுமே
இசைகருவிகளால் வசமாகாத இதயங்கள் இல்லை என்றே
சான்றோர் இயம்பினர்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
26.02.22