சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__55

“சாந்தி”

காலையில் எழுந்து
காலை கடமைதனை முடித்து
கடவுளை மலர்தூவி வணங்கி
தீபம் ஏற்றி அழகு பார்ப்பதே
என் மனதிற்கு
ஏற்படும் சாந்தி!!

பக்தி பாடல்களை
பக்தி பரவசமாய்
பண்ணோடு கேட்கும் போதே
அமைதி எட்டுமே!!

குடும்பமாக குதுகலமாக
ஒன்றிணைந்து
பேசி மகிழ்வது
ஒன்றித்து செல்வது ஆனந்த அமர்வு தரும்!!

மழலை மகிழ்ந்து பேசி
ழொழியில் குழாவி குளையும் சிறுவர் இளையோர் என் தமிழ் ழொழியும்
என் காதில் கேட்பது சாந்தி!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்