சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் __53

“மிருகங்களின் அட்டகாசம்”

வீட்டு தோட்டமதில் விதம் விதமாய்
காய் கனிகள்
விணாக்கும் விந்தை மிருகம்
விளையாட்டாய் நடக்குது!!

வாழை குலையை குரங்கு
வாரி வாரி தின்னுது
மாங்காயை
கொப்பு கொப்பாய்
கொட்டி தள்ளுது
தேசிக்காயை
சேதம்மாக்குதே!

தேசம் கடந்து ஓடுதே
மரம் விட்டு மரம்
தாவும் மந்திகளால்
மாந்தர் படும் அவலம்!!

பேசும் இதயங்கள் பேசிக் கொண்டிருந்தனவே
காற்றலையில்
காது கொடுத்தேன்
யானை வீட்டு கதவை தட்டுதாம்
வெடி கொழுத்தி எறியினமாம்
அரசு வேடிக்கை
பார்க்குதே!!

எனக்கோ புதினமாய் இருக்குது
காட்டில் வாழ்ந்த யானை கதியில்லாமல்
வீட்டுக்குள் நூழையிதே!!

யானையின் பலம்
உங்களுக்கு தெரியுமா
சுவரில் முட்டினால்
விடே இடிந்துடுமே
விணாய் போகும் எம் சொத்து
யார் இதை பற்றி கவலைபட போகினம்!!

இன் நிலை மாறுமா
மாற்று வழி கிடைக்குமா!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்