சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ___52

“புன்னகை”
புன்னகையே
வாழ்க்கை
புன்னகை பூக்கள்
பூக்களாய் மலரட்டும்
பூத்த்து குலுங்கட்டும்!

பூக்களில் தேனி
தேன் சொட்டி
மகிழ்வது போல்
புன்னகையை
தேடி ஓடு!

காய்த்த மரம்
கல்லறி வேண்டுமே
புன்னகையை
குலைக்க மாந்தர் வேவு பார்ப்பாரே
பாதைக்கு வழிவிடாதே!

துன்பம் உனக்கே என
எண்ணிடாதே
ஏணி போல்
ஏற்றம் காணு!

இன்பம் துன்பம்
சுழலும் சக்கரம்
இன்பத்தில் சிரித்திடு
துன்பத்தில் அழுதிடு
புன்னகையே வாழ்க்கை!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்.