சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ____50

“பரவசம்”

பொட்டு வைத்தே பூ வைத்தே
தலைவாரி அழகு பார்த்து
அணைக்கும் என் அக்கா!!

பாடம் சொல்லி தருவாள்
பாட்டும் கற்று தருவாள்
தடியால் அடிக்க மாட்டாள்
தந்திரமாய் நடந்து கொள்வதை பார்த்து பரவசம்!!

அழகு சட்டை
என் அழகுக்கு ஏற்ற வர்ணம்
தானே உற்றுநோக்கி
ஊர்ந்து போய் வாங்கி வருவாள்!!

இசையும் கதையும் கேட்பாள்
இசைந்தே எமக்கு சொல்லிடுவாள்
இயன்ற வரை ஈடுபாடு காட்டியே
ஈகம் உடன் நடந்து கொள்வாள்!!

நான்கு ஆண்டின் பின்
ஓன்றிணைவு
ஓடி ஆடி திரிகின்றோம்
பயண தடையை உடைத்து
விண்ணூந்தில்
வந்தடைந்தாள்
விண்ணதிரும் பேரின்பம்!!

பரவசமாய் பார்க்கின்றேன்
பாமுக பூக்கள்
நூல் வெளியீட்டில்
பக்குவமாய் அமர்ந்திருந்தாள் பண்புடன்
பரவசம் பரவசம்!!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
23.01.22