சந்த கவி இலக்கம்___49
பாமுகப் பூக்கள்
பாமுக ஆசான்
ஆற்றல் மிக்க அதிபர்
இணைய தளத்தில் என் பேச்சும் மூச்சும்
உருவெடுத்து
எழுந்தேன்!!
தனித்து பிறந்திருந்தால்
தவித்து இருப்பேன்
தச அவதாரத்தையும் இணைததாள்
அன்னை!!
தனித்து நூல் வெளியீடு செய்திருந்தால்
இளைத்திருப்பேன்
களைத்திருப்பேன்!!
இணையாய் பத்தொன்பது
பூக்கள் மலர்ந்தது மகிழ்வு!!
என் கவி நூல் என்று சொல்வதை விட்டே
எங்கள் கவிஞர்கள் கவிதை நூல் என
நூலகத்தில் சேர்ப்பதில் மகிழ்வேன்!!
ஒற்றுமையின் பிரதி
பன்மையில் பல மடங்கு
பார்போற்ற பக்குவமாய்
சுமையை இமையாக்கி
பங்கெடுத்தார்
பாவலர் பாவை தம்பதிகள்!!
நன்றி
வணக்கம்
16.01.22