சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 48

“ஒற்றுமை ”
ஒற்றுமையை உணர்த்தி
ஒன்று பட்டு உழைத்து
ஒன்றிணைந்த
நூல் வெளியீடு
பாவையின் பாவலரின் பக்குவம் பார்த்தோமே!!

ஒற்றுமையாக வாழ வேண்டுமே
ஒத்துழைத்து
ஆக வேண்டுமே
ஒத்தாசையாக
இருக்க வேண்டுமே
ஒப்புதல் கொள்ள வேண்டுமே!!

அன்பு காட்ட வேண்டும்
அல்லல் தீர்க்க
வேண்டும்
ஆதரவு கொடுக்க வேண்டும்
ஆறுதல் படுத்த வேண்டும்!!

இன்பம் துன்பமதில் கலந்திட வேண்டும்
இணையாய் துணையாய் கை கொடு
இரக்க சிறக்க வருவோர்க்கு
இயன்ற வரை
இசைவு காட்டு!!

நன்றி
வணக்கம்
08.01.22
சிவாஜினி சிறிதரன்