சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி__47

“இலக்கு”

நன்றாக படிக்கணும்
நற் பண்போடு
இருக்கணும்
நன்மைகள் செய்யணும்
நாலுபேர் மதிக்கணும்
நானிலம் போற்றணும்!!

வேலை செய்தே
பெற்றவர்களை
பார்த்தேன்
சகோதர்க்கு
உதவினேன்
சான்றோரை மதித்தேன்
சந்தோசமாக
வாழ்ந்தேன்!!

ஐரோப்பா பாக்கணும் என்று பேராசை
ஓர் ஆசை
ஒத்துழைத்தனர் பெற்றவரும்
உற்றவரும்!!

திருமண பந்தம்
என்றால்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டுமேன்றே அடமும் பிடித்தேன்
கனவும் கண்டேன்
இலக்கை அடைந்தேன்!!

குழந்தை குஞ்சு
குதுகல வாழ்க்கை
குலமும் மகிழ்ந்தது
இணையான் துணையான்
துணையுடன்!!

மாடி வீட்டில்
மாய்ந்த வாழ்க்கை
மாற்றம் காண வேண்டுமேன
இலக்கு கொண்டே
சொந்த வீடு கட்டி
இன்பம் கண்டோம்

இல்லறத்தில்
நல்லறம் கண்டு
இன்பம் கொண்டோம்
காய்த்த மரம் மட்டுமல்ல
கட்டிய வீடும்
கல்லறி வேண்டணும்
என்பதுவே குறிக்கோள்
என் இலக்கு!!

நன்றி
வணக்கம்
03.01.22