சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_101

“விடியல்”
காலை பொழுது
கடுகதியாய் ஓடும்
கண் இமைக்கையில்
மாலையது வந்து விடும்

விருப்புடன் பணியை
விரைந்து செய்து
வீச்சாய் நேரத்தை
மூச்சாய் கொண்டு

சாதனை சோதனை
கடந்து செல்ல
நம்பிக்கை விடியலை தேடு

நாள் பட்ட பிரச்சனைக்கு தீர்வு
நாள் செய்யும் முயற்சி விடியல்
நாளைய விடியல் உன் பெயர் சொல்லும்
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்