சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__ 100

” தீ ”
ஆதி மனிதன்
ஆனந்த தீ மூட்டி
சுட்டு எரித்து
சுவையாய் உண்டு மகிழ்ந்தான்

அம்மா அடுப்பு மூட்டி
விறகு எரித்து
ஊது குழலில்
ஊதி உரசி

மூச்சுக்கு ஒரு பயிற்சி
வீச்சாய் சமைத்த
நெல்லரிசி சோறு
நெய் மணக்கும்
கத்தரிக்காய்
சம்பல் சாம்பாறு
தணலில் வெந்து வேகிய உணவு
சாப்பிட சேட்டயாய் இருக்குதே

காட்டு தீ
கனல் கொள்ளுமே
அனலாய் பரவி
அனர்த்தத்தை தருமே

செய்திகள்
வேகமாய் பரவி
தீயாய் பறந்து
தீக்குமே மனதை!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்