சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்__
98

“மொழி ”

அன்னை தந்தை தந்த மொழி
அமுதிலும் இனியது
எந்தன் மொழி
தேனை ஒத்த சுவையுண்டு
தோழி தோழா
வாருங்கள்
தொலையாது மொழியை கற்றிடுவோம்

உலகில் பல மொழியுண்டு
உணர்ந்து நாமும் கற்றிட்டால்
உலகை சுற்றி வரலாமே
உவகை நாமும் கொள்வோமே

உன்னதமான பல மொழிகள்
உற்றார் உறவுகள் பேசும் மொழி
உச்சம் கண்டு நான் மகிழ்வேன்
உச்சி முகர்ந்து பேசிடுவேன்

மொழிகள் கற்க
தடையேது
மௌனித்து இருக்க இடமேது
மொழி வெறி கொண்டு பேசிட்டால்
மொழிக்கு ஏதும் தடை இல்லை
மொத்தமாக சொல்வோமே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்