சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
97

“சாதனை”

மனிதன் வாழ்ந்தான்
என்பது முன்வரிசை அல்ல
அவன் எப்படி தடைகளை தகர்த்து
சாதனை படைத்தான்
அதுவே சரித்திரம்

எம் இனத்திற்காக
எம் மொழிக்காக
எம் தேசத்திற்காக

தம்மை இழந்து
தம் குடும்பத்தை இழந்து
தாய் தேசத்திற்காக வாழ்ந்து
சாதனை புயலாய் சரித்திரம் படைத்தவர்கள்
எங்கள் தலைவர் பிரவாகரன்
மாவீர மகுடங்கள்

இன அழிப்பு
ழொழி அழிப்பு
ஆவணம் எரிப்பு
பேச வாய் இன்றி
பெற்றவர் உற்றவர்
நாடு கடந்து ஓடினம்

நாள்பட்ட பிரச்சனை
நாற்காலியில் இருந்து பாக்கல்ல
நானிலத்திலும் சமர்
நறுக்கென நாலு வார்த்தை கேட்ட செய்தியாளர் கடத்தல்

துணிந்து நின்று
போர் தூண்டிக்கும் வரை
போர் தொடுத்து
மானமுள்ள தமிழனாய்
மண்டியிடாமல்
மடிந்தவர்கள்
மாவீரர் மகுடங்கள்

தமிழன் சாதனையை முறியடிக்க
இந்திய புலன் ஆய்வு துறையின்
புது புரளி
பழநெடுமாறன்
ஐயாவின் நாடகமா ??

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்