சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 96
“ஊக்கி”

கை அடக்கு பேசியில்
கண்ணை தொலைக்காதே கண்ணுக்கு விருந்தாக்கு
மனதுக்கு மருந்தாக்கு
உன் செயலை அறிவாக்கு
ஆற்றலை வெளியாக்கு

உலகம் உள்ளம்
கைக்குள்
உன் சிந்தனை
சிதறட்டும்
சிற்பமாய் செதுக்கு
சின்னவனும் கண்டு மகிழ ஊக்கி ஊக்கி

மண் வாசனையை நேசி
மண் கலைஞரை யாசி
பாரம் பரிய இசையை சுவாசி

எம்மவர் படைப்பை
இயன்ற வரை
ஊக்கி
ஊனமுற்று போவதே
ஊக்க கொடுப்பு இல்லாத போதே

பொன் போன்ற முயற்சி
பொருளாய் பயிற்சி
போதையை போட்டு
வானதியை வதைக்காதே
வன்முறை செய்யாதே

ஊக்க மாத்திரை
ஊனமுற்ற யாத்திரை
விளையாட்டு வீரன் கொடுப்பு
குதுகல விளையாட்டு எடுப்பு
வெற்றி கிண்ணம் அடுக்கு
பார்வேந்தர் கடுப்பு !

நன்றி
வணக்கம்