சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 95

“நிட்சயதார்த்தம்”

மணமகன் மணமகளை
புகைப்படத்திலோ நேரிலோ பார்த்து
ஜதகமும் பொருந்தும் பட்சத்தில்

இரு வீட்டாரும்
இணைந்து
கொழுக்கட்டை மாற்றி
விருந்து ஓம்பல் நடைபெறும்

இரு வீட்டாரின்
சம்மதத்துடன்
உற்றவர் உறவுகள் முன்னிலையில் தட்டுமாற்றி
நிட்சயதார்த்தம்
நடைபெறும்

மணபெண் மணமகன்
இருவருக்கும் இல்வாழ்வில்
விருப்பு கொண்டு
திருமணம் வரை
உறுதிப்பாடு மாறாமல் இருக்க
செய்யும் சடங்கே
நிட்சயதார்த்தம்!