சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 94
உணவு தட்டுப்பாடு

உக்ரேன் சமர்
உணவு தட்டுப்பாடு
உணவு விலை ஏற்றம்
உலகம் முழுக்க முடக்கம்
உணவு தட்டுப்பாட்டை
உன்னிப்பாய் கவனிக்கும் உணவகம்

மாப்பொருள் பாவனை குறைப்பு
மரக்கறிகள் உண்ண கொடுப்பதில்
கவனம் எடுக்கினம்
காய்கறிகளை
சுவைக்கு சுவை சேர்த்து
நாளுக்கு நாள் பரிமாறி
கவனமும் செலுத்தினம்

விடுகளில் நாமும் அக்கறை எடுப்போம்
காய்கறிகளை உணவில் சேர்த்து
உணவு தட்டுப்பாட்டை
நிவர்த்தி செய்ய உழைப்போம்

ஏதோ ஒரு சாட்டு வந்திடும்
அதை வைத்து பிளைப்பும் நடந்திடும்
அன்றாடம் வாழ்க்கையும் ஓடிடும்
நாம் அச்சமின்றி உச்சத்தில் வாழ்வோம்
உணர்ந்து நடப்போம்

நன்றி
வணக்கம்