சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
வாரம்_154
“பள்ளி பருவம்”

பள்ளி பருவம்
துள்ளி திரிந்தம்
துன்பம் இன்றி
இன்பம் கண்டம் !

ஆடிப்பாடிய
ஆனந்த நாள்
பாடித்திரிந்த
பறவைகள் நாம்
கூடிக்குழாவிய குருவிகள்
கூச்சல் போடும் குயில்கள்
ஆகா ஆகா
எத்தனை இன்பம் கண்டேன்!

இனிய வேளை
இடைவேளை
நான்கு தோசை கொண்டு சென்றால்
இரண்டு தோசை சக
தோழிகளுக்கு பகிர்ந்து கொடுத்து
உண்டு மகிழ்ந்த காலம்!

தமிழ் தின போட்டி
விளையாட்டுப் போட்டி
போய் வரும்போது
முரளிப்பழம்
மோரப்பழம் வேண்டி
பண்ட மாற்றாய் பகிர்ந்து உண்டோம்!

இல்ல விளையாட்டுப்போட்டி
இல்லத்திலும்
ஏட்டிக்கு போட்டி
உன் இல்லமா
என் இல்லமா
வெல்வது யார்
வென்று தான் காட்டுறன் முரன்பாடும்
வந்திடும்
முன்னுக்கு பின்னுக்கு
சரியாகி சான்றிதழ் கிடைத்திடும்

புள்ளி மான்களாய்
புள்ளி போட்ட
பள்ளி பருவம்
அன்றும் இன்றும்
மகிழ்ச்சி நம்
கையில் தான்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
28.06.24