வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

மனிதத்தை தேடுகின்றேன் மனிதரில்

வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோன் உயரும்

என்றபடி வாழும் மனிதம் எங்கே…

நேயங்களைத் தொலைத்து

நிமிடத்திலே அழித்து

ஆசையென்னும் மோகத்திலே

அசைபோட வைத்துவிட்டார்.

வீழ்ந்து விட்டதையா மனிதம் விரும்பியபடி வாழ்ந்து கொள்கின்றார் மனிதர்

தேம்பியழுகின்றது தர்மம்

திரும்பிப்பார்க்காதோ நேயம்

திரும்பவும் கிடைக்காதோ சந்தோசம்

உறவுகளுக்குள் எத்தனை விரிசல்கள்
உரிமைகளுக்கு எத்தனை போராட்டம் திட்டமிட்ட சதிகள் எத்தனையோ தீர்வு கிடைக்காத சமுதாய மாற்றங்கள்

கூழ்குடித்து நின்மதியாய் உறங்கிய இம்மாநிலத்தில் புரியாணி சாப்பிட்டும் உறக்கமே இல்லையம்மா வன்முறையும் வதைக்கும் எண்ணமும்

நித்தம் கவலையும்

நின்மதியற்ற வாழ்வும்

சத்தமில்லாத மரணங்களும் சந்தோசமில்லாத பயணங்களும் நித்தம் நிதம் இம்மாநிலத்தில் தொடர்ந்தால் மனிதத்தை தேடுகின்றேன்.

எங்கே…. எங்கே….