சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

பெண்மையைப் போற்றுவோம்
<<<<<<<<<<<<<<<<<<<

பொம்மைபோல் வாழ்ந்தவள் பெண்மையை உணர்ந்தவள்

தாரத்தில் வந்தவள் தாயென நிற்பவள்
தாகத்தைத் தீர்ப்பவள் தளராமல் இருப்பவள்
தீரமாய் நின்றுமே துணிவுடன் சுமப்பவள்
வாழ்விலே நிறைமதி வகுத்துமே கொள்பவள்
தாழ்வின்றிக் குடும்பத்தை தலைநிமிர வைப்பவள்

சிக்கனம் காட்டியே கோட்டையும் கட்டுவாள்

பெண்மையின் பேறே பொறுமையின் நாயகி
குலங்காக்கும் குலமகள் குணத்திலே பூமகள்
சீலமதில் அவளும் சிறந்த தாயுமே

போடாதம்பி பெண்மையை உணராமல்
வாடாகளத்தில் வாதிட்டுப் பார்ப்போம்
உண்ணையும் தந்தவள்
தாயென்னும் கோயிலடா

சிவருபன் சர்வேஸ்வரி