சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

வேலி அடைப்போம்
<<<<<<<<<<<<<<<<<<<<<<

ஆசையெனும் வேலியை அளவாக அடைத்துவிடு
அடுத்தவன் வேலியை அடைக்கவும் போகாதே
இங்கிதம் இல்லாமல் இடிபாடும் அடிபாடும்
இரக்கமற்ற நிலையால் அளவுகடந்த ஆசைகள்
பாகம் பிரிக்கும் பங்காளிகள் எத்தனைபேர்
வேகம் கொண்டே விரைந்திடுவார் சண்டைக்கு
கண்ணிய வேலியை நீதியுடன் காப்பாற்று
கடமை மீறாமல் வரம்போடு வாதாடு
கட்டுப்பாடாய் ஒழிகிடவும் கற்றுவிடு

செம்மை நெறிக்கு அழகாக வேலி
எம்மைக் கட்டுப்படுத்து எகிறிடாத வேலி
தம்மைத் தாமே உணரவேண்டும்
மமதைகளின்றி மானிலம் சிறக்கட்டும்
வாழ்க்கையென்னும் வேலிக்குள்ளே அடைபடுவோம் சிறப்பே

சிவருபன் சர்வேஸ்வரி