சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன். சர்வேஸ்வரி

பகலவன்
&&&&&&&&&&

பகலவன் ஒளிபோன்று கண்ணே நீவளர்வாய்
பாருக்கு தலைமகனாய் பணிந்தே நீசிறப்பாய்
படித்தும் வரவேண்டும் பக்குவமாய் நீவாழ்வாய்
வடித்துவைத்தாள் அன்னை வண்ணமகனே கேட்டிடுவாய்

அறநெறி கற்று ஆன்மீக ம் நீவளர்ப்பாய்
அன்புடனே நீவிளங்கி ஆற்றலுடன் நீமிளிர்வாய்
கனிந்த நற்நோக்குடனே காலத்தில் நீநிற்பாய்
இனியும் கவலையில்லை இமயமாய் நீ உயர்வாய்
பனித்துளி அகன்றுவிடும் பாசமும் அகலாது
மழைத்துளி மண்ணிற்கு மகிமையை கொடுத்து நிற்கும்
இனிக்கப் பாடிநின்றேன் என்மகனே கதிரொளி நீதானே

சிவருபன் சர்வேஸ்வரி