சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

மாசி காலம்
&&&&&&&&&&&&

மாசிப் பனியும் மூசிக் கொள்ள
மனங்கள் குளிர்மையில் விறைத்தும் நிற்க
மாசியில் நல்ல தூக்கமும் கொள்ள

குளிருமோ கூடி நிற்கும் மாதம்
குடுகுடு எனவும் நடுங்கவும் வைக்குமே

படபட என எழுந்த போதிலும்
நடுங்கியும் நிற்கவும் வைத்துக் கொள்ளுமே

மாசிமாகா சிவராத்திரியும விடிய விடிய குளிரினிலே
இறைவன் நாமம் சொல்லிச் சொல்லி
மனதில் துன்பம் தீர்த்திடுவோம்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி