சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

நிலாவில் உலா
<<<<<<<<<<<<<<

பொன்மஞ்சள் பூத்த பொழுது
போதரவாய் உலாவரத் துடிக்கும் மனது

பெளர்ணமியின் அழகு ஒளியின் சிறப்பு

பெளவியமாய் பயணம் போகத் துடிப்பு

தென்றளவள் இதமாக வீசியும் நிற்ப்பாள்
தேன்மதுரகீதமாய் பறவைகள் ஒலியும் கேட்கும்

தேனிலவில் பயணம் போவதும் இதமே
தித்திப்பானது நிலாப் பொழுதும் சுகமே

கலைநிகழ்வுகளைக் கானப் போகையிலே

கனியும் மனமும் நிலவோடு உலாவியங்கே

காட்சியும் கானமும் இசைத்தும் நின்றிட

காரிகை நிலவோ களிப்பிலே மிதப்பாளே
இருண்ட இரவும் வெளிச்சத்தில் தோன்றும்

இரவு ராணியும் உலா வரும் போது

இதயராகம் துடிக்கும் ஓர் கனமும்
இன்ப கீதமும் பாடவும் தோன்றும்

அழகு நிலாவோடு பயணம் ஆடுமே
ஆனந்தம் மிதந்த பாதையும் செல்லுமே

அழகு நிலா முற்றத்திலும் அழகிதானே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி