சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

வலைப் பூ-

என் ஆசை மச்சான்-நீ
வலைகொண்டு வருவாயென்று-யான்
சிலையாக நிற்கின்றேன்
கலையாக நீ வந்தாய்- நானும்
காதல் வலை வீசிநின்றேன்

வேலைக்குப் போகையிலே – உனக்கு
வீண் பேச்சுத் தேவையில்லை
வலை போட்டு வந்தால்த்தான்-
சுளையாகப் பணம் வருமே

கடலலை அடிக்கிறது- அங்கே
காற்றும் பலமாய் வீசுகின்றது
நடுக்கடலுக்குப் போகவேண்டும்
நான் வாரேன் நாயகியே

என் மனமும் அலை போல
குமுறுவது புரியலையோ
வலை வீசி மீனைப்பிடி- உன்
வலைப்பூவுக்குள் என்னைப்பிடி

பாசவலை போட்டதாலே-என்
நேசவலை நீ யானாய்
மோசவலை போடாமல்- என்
மோகினியே விலகிநில்.

கலையாத என்னகத்தில் நிலையாக நிற்பாய் மச்சான்
பாலைவனமாய் நிற்கின்றேன். சோலை
வனமாய் வருவாய் மச்சாள்
வாலைக்குமரியடி கண்னே -என்னை
வளைப்பூக்குள் மடக்கிய சிறுக்கியடி

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி..✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️