வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

நமசிவாயா எதற்கு..!?

கோயில்களெல்லாம்
அலங்கார உற்சவம்
கோப்பைகளேந்திய மனிதர்கள்
ஊர்வலம்
காத்திரமில்லையென்று- சிலர்
கையேந்தும் நிலையுமேனோ?

பாவப்பட்ட ஜென்மங்களை -இப்
பாரினில் சுமந்துவிட்டு- வீதி
ஓரம் விட்டெறிந்து
விளையாட்டாய் போனதாலே

தந்தையும் தாயும் தெரியாமல்
அனாதைகளென்ற பெயர்
பெற்றவரைப் பெற்றவர்கள்- இன்று
பின்புறம் தள்ளியதால்- பெற்றவர்
இன்று ஆச்சிரமத்தில் அகதிகள்

பெற்ற கடன் தீர்ப்பதற்கு பிள்ளைகள்
சிலர் இங்கில்லை
உற்ற கடன் தீர்ப்பதற்கு- சில
உறவுகளிற்கு வழியில்லை

சொத்துச் சுகம் , பணமிருந்தென்ன
சொந்தமெல்லாம் வேறுகூறாகி
நற்றுனையில்லை யென்றால்
நமசிவாய எதற்கு..!?

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி. இலங்கை.