வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

எண்ணம் கலையுதடி

ஓடக்கரையோரம். தன்னில்
ஒய்யாரமாய். போறாய் பெண்ணே
நில்லு கொஞ்சம். நானும் வாறேன்
நின்று பேசிப் போகலாமே

எட்டு முழ வேட்டி கட்டி
வெட்டரிவாள் எடுத்துக் கிட்டு
வயற்காடு. போகாமல் __ என்
வழியோரம் ஏன் வாராய்

பட்டு வண்ணச் சேலை கட்டி என்
பைங்கிளியும் போவதையும்
பார்த்து. நின்றேனடி _ உன்
பக்கத்திலே. வந்தேனடி

சும்மா நீ சொல்லாதே __ ஒரு

சோம்ப,றியாகிடாதே
பச்சை வயல் பழுத்திருச்சு _ நீயும்
பார்த்து வெட்டிக் களம்
போடுராசா

செம்பருத்திப் பூவாட்டம் __ என்
சிங்காரி நீயிருக்க _ என்
சிந்தையெல்லாம் உன்மேல
சிதறி யெண்ணம் கலையுதடி

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி