சந்தம் சிந்தும் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

வசந்தத்தில் ஒர் நாள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாழ்வினிலே இன்பம் வாழையடி வாழையாக
வசந்தமிங்கே வீசிடவும்
வண்ணமலர் மலர்ந்ததுவே

வாரியெடுத்து தானனைத்து வண்ணமடி ஏந்தியதும்
வசந்தத்தில் ஒர் நாளும் இறைவனது வரமே

அன்னைமடியாம் இருக்கையிலே ஒர் வசந்தம்
ஆனந்த வாழ்வினிலே தெவிட்டாத வசந்தம்
அறமான குடும்பத்திலே என்றுமே வசந்தம்

பாசம் கொண்ட உறவுகளையும் சந்திக்குமின்பம்
பாட்டெழுதிப் பட்டமும்
வாங்கும்போதும் பேரின்பம்
முத்தமிழையும் பயிலும் போதே அதிலென்றுமின்பம்
முகழ்ந்தெடுத்த முத்துப்போல் வசந்தமும் சிந்தும்நாளே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி