வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

கடந்து வந்த பாதையில்
<<<<<<<<<<<<<<<<<<<

காலச் சக்கரமும் வேகமாய் சுழன்றதுவே

காரிருள் அகன்று அகமது குளிர்ந்ததுவே

கலக்கமான வாழ்வுகளோ கலைந்தோடும் முகிலாகின

காலமும் இப்போது எம்மைத் தாலாட்டினவே

வாழ்வா சாவா எத்தனை பதட்டங்கள்

வாழ்வின் நிலையிலோ எத்தனை ஒட்டங்கள்

வாழும்போதும் எத்தனை போராட்டங்கள்

வரம்புகள் கடந்ததும் மனமது தேரோட்டம்

உள்ளத்தின் நிலையிலோ ஊமைக்காயங்கள்

உணர்வுகளின் மத்தியிலே விம்மல்களும் வெடிப்புக்களும்

ஊனங்கள் எத்தனையோ அவலமாயும் சுழ்ந்ததுவே

உணர்வகளெல்லாம் ஒசையின்றி அழுததுவே

நடக்கும் என்பது ஒன்றுமே இல்லையே

நம்மையும் அறியாமல் எத்தனையோ நடந்ததுவே

நாடும் நகரமும் இடியும் மின்னலும்

நாதியற்ற ஊர்வலத்தின் எல்லையில்லாத பயணமுமே

தேடியதும் ஒன்றுமில்லைக் கைகளிலே
தேயாத நிலவும் வான்மீதில் இல்லையே

தேய்பிறை போன்றே தேய்ந்துமே நின்றபோதும்

வளர்பிறை போன்றே வண்ணமாக மிளிர்ந்தோமே.

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி