வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

புலவி வருவது தமிழே..!

தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்

தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே

பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே

பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே

ஒளவை மொழியும் அழகு தமிழே

கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே

கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே

முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே

மூவுலகும் போற்றும் முத்தான தமிழே

மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்

மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்

மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே

சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே

சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ

பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு

பொங்கு தமிழே புலவிவரும் தமிழே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி