ஈசன் தந்தான் சரிபாகம்
மண்ணும்குளிர விண்ணும்குளிர
மாதவம் செய்தாய் பெண்ணே நீயும்
கண்ணும்குளிரக் கருத்தும்குளிர
காரணமானவள் நீதானே
பொன்னும் குவியப் பொருளும் நிறைய
புதுமைகள் பொங்கிட நின்றாயே
பண்ணும்இசைத்துப் பாடல் பாடவும்
பாவையுந்தன் புகழ்தானே
வளைகரம் கொண்டாய் விளைநிலமானாய்
குடியிருந்த கோயிலென்பார் கும்பிட்டுன்னை வணங்கி நிற்பார்
பூமிமாதவென்றுண்ணைப் புகழ்விளங்கப் பாடிக்கொள்வார்
பாரதம் துலங்கடவே நாயகி நீயானாய்
கங்காதேவியென்று உன்னைக் கைகூப்பி தொழுதிடுவார்
பெண்ணவள் என்றும் பெருமை சேர்க்கும் பொக்கிசமே
எங்கும் எதிலுமே உனது இயக்கம் ஈசன் தந்தான் சரிபாகம்
-சிவருபன் சர்வேஸ்வரி