வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

கையுக்குள் கையாய் கைத் தொலைபேசி
*************(*(*(((((*******(

உற்ற நன்பனும் உயரிய பணியிலும்
உறுதுனையாக நிற்பதும் எமது கைகளிலே

கூடுவிட்டுக் கூடுபாயும்
தரமான செயலும்

நாடுவிட்டு நாடுநகரும் பணியும் செய்திட

நம் கைக்குள்ளே ஒருகையாய் கையாளும் தொலைபேசியும்

கட்டம் கட்டமாக பெயர்பதியவும் கைங்கரியமுண்டு

தட்டிவிட்டால் நாடெல்லாம் தந்தியும்
சொல்லிநிற்பான்

நல்லநிலைக்கும் உயர்த்தியும் விடுகிறான்

நல்லநன்பன் எமைக்காக்கும் தோழனும் அவனே

சொன்னதும் செய்கின்றான் வென்றுவரவும் நிற்க்கின்றான்

கண்ணின் மணியாக ஒளியாய் துலங்குகின்றான்

பெற்றபிள்ளையும் செய்வானோ தெரியாது

பெறாமகன் இவனும் செய்கின்றான் பாரேன்
கைக்குள்ளே கையாய் கைத்தொலைபேசியும் தானே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி