வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

தரமாய் நிமிர்வாய் நாளை
*************************
எண்ணித் துணிவாய் ஏற்றம் கொள்ள
மண்ணில் வண்ணமாய் வாழ்ந்து கொள்வாய்
பண்ணில் இசைத்திடும் கீதமும போன்றே

திண்ணமாய் மலர்வாய் நன்றே நீயும்

சாதுபோன்ற குணமும் இருப்பதும் நன்றே
யாதும் உணர்ந்தே நடந்தும் கொள்வாயே

பாதகம் செய்யாத மனமும் வேண்டும்
வாதம் புரியாத நிலையும் வேண்டும்

மலரும் எண்ணங்கள் நன்மையும் அடைய
மாயம் இல்லாத கொள்கையும் தேவையே
மெனமாய் இருந்தும் சாதித்துப் பார்ப்பாய்

மயக்கமதனை விடுத்து பாரினில் சிறப்பாய்
காலம் என்றும் உன்னையும் வாழ்த்தும்
கடமையும் மாறாத பண்பையும் ஏற்ப்பாய்
கண்ணிய வாழ்வே சிறந்தது நினைப்பாய்
காலத்தில் நல்ல சேவைகளைச் செய்வாய்
பண்ணும் பயனும் பலத்துடன் வீரமும்
பாடத்தை உணர்ந்து பாரினிலே விழிப்பாய்
பகலும் இரவும் மாறிமாறி வருமே
பரிவாய் தரமாய் நிமிர்வாய் நாளை

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி