சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முக நூலில் தினம் ஏறும் பல நூறு காட்சி
அகத்தில் எழும் துயர் ஏழை பண நிலையை காட்டி
பல நூறு உல்லாசம் பயணங்கங்
உண்டி
படை படையாய் விடுமுறையில்
நாடுகளை சுற்றி
அகதி என்று வெளிநாடு போனோர்கள் வசதி
அடிபாட்டில் அகப்பட்டு நாட்டில் உள்ளோர் பொருமி

நாளாந்தம் வேலைக்கு போனால்தான் வாழ்வு
நாள் வேலை வாயபின்றி
வயிறு அன்று காய்வை
நாள் கோள்கள் மாறுவது
மனிதருக்கு பொதுவில்
நமக்கு மட்டும் ஏன் வெள்ளி
திசை விடியா வாழ்வு