சந்தம் சிந்தும் சந்திப்பு
ஊக்கம் “
ஊக்கத்தை கைவிட்டால்
உயர்ச்சி எம்மை விட்டுப்போம்
அனாவை படிக்கின்ற
அருவரி வகுப்பில் இது
ஊ எழுத்துக் குள்ளாகும்
ஊக்கமது கைவிடேல்
ஓமுவது ஒழியேல்
வாழ்க்கையில் உயர்வழி
வயது ஐந்தில் படிப்பித்தார்
பயிற்சி தந்து போட்டிகளில்
பங்கு பெற வழி செய்து
பள்ளி பாடத்தோடு
பலவும் கற்பித்தார்
இல்ல விளையாட்டு
என்று ஒரு போட்டி
நாடகம் நடிப்பு
ஆடல் பாட்டு
எல்லாமே கற்பித்து
சொல்லித் தரும் பள்ளி
அவரவர் திறமை
அடையட்டும் உயர்வை
அதற்கு ஊக்கம்
அளிப்பது கடமை
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-