சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
பகலவன்
நானும் போய்பார்த்தேன்
நாலு நாடுகளை
நம் நாடு போல
நாள் இரவு என்ற ஒரு
சீரை கண்டிலேன்
சீமை நாடெல்லாம்
கோடை என்றால்
கொழுத்தும் வெய்யில்
இருள் சூழ மணி பத்து ஆகும்
மாரி என்றால் மழைக்கால் இருட்டு
மாலை நாலுக்கே இருட்டும்
எங்களுக்கு பகலவன் இறைவனைப்போல்
என்றும் நன்றே செய்வான்
சீமை நாடு எங்கும்
குளிர்காலம் உறை பனி மூடும்
ஊசி போல உடம்பெல்லாம்
உள்ளேறி குளிர் வாட்டும்
எங்கள் நாடுகளில்
இத்தொல்லை கிடையாது
பகலவனை வாழ்த்தி பணிவோம்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-