சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 245
காதல்
மைத்துனரை மணம் முடித்தார் அம்மா
பக்குவம் தான் பட்ட பின்பு
ஒரு நாளும்
பாக்கவில் முகம் அவரை என்பா
மணவறையில் கவிழ்த தலை யோடு
மறு நாள் முகம் பார்த்தேன் என்பா
எனக்கு மண பேச்சு எல்லாம் நடந்து
இவர்க்கு இவர் என்று
நிச்சயம் பண்ணி
முடிய இவர் இடையில்
வந்த போதும்
இருத்தி வைத்து கதைத்தனுப்பி ஐயா
திருமணத்தை செய்து வைத்தார் சிறப்பாய்
பேரன் பேத்தி காலம் மிக மாறி
ஆண் பெண் அடி அடா போட்டு பேசி
காதலிப்பு என்று கதை வந்து
கட் டாய் அது போய் பின்பு
காதல் என்ற பேரில் வேறு ஓடும்
காட்சிகளே எங்கெங்கும் பாரும்
எல்லாமே தலைகீழாய்
மாறி
எது எங்கோ காதல்
பேரை கூறி
சிவரஞ்சினி கலைசெல்வன்