சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
“கலவரம்”
வத்தளையில் கடை வைத்து
வாழ்ந்த காலம் அது எண்பத்திமூன்று
இத்தனை நாள் போன பின்னும்
இன்னும் பய கனவாக. கண்ணி வெடியில் ஆமி
கன பேர் மாண்டராம்
கொண்டு வர படுகிறதாம்
கொல் பட்ட உடல்கள் என்று
செய்தி பரவ சிங்கள நண்பர்கள்
நிலவரம் பிழை
இன கலவரம் வரலாம்
எதற்கும் கவனமாய்
இருங்கள் என்றார்கள்
மாடியிலே வீடு
கடை கீழே
கனத்தையிலே கன சனம்
காடையர்கள் கூட்டமாய்
உடல்கள் எரிய முன்பே
ஊளையிட்டு பெரும் கூட்டம்
தமிழர் வீடு எது என்று
தாம் அறிந்து வைத்திருந்து
எரித்தார் அழித்தார்
எங்கும் தீப்பிளம்பு
பொலீஸ் இல்லா வாதியில்
பொல்லாத வெறிக்கூட்டம்
பிள்ளைகளை ஒளித்து பின் கதவால் வெளியேற்றி
சலீம் ஹஜியார் வந்தார்
கண்கண்ட கடவுளாய்
எம்மையும் கூட்டி மகள் வீட்டு
மாடி மறைவில்
தம்முடன் வைத்திருந்தார்
தடல் புடல் சத்தம் எம்
கடை உடைப்பு சத்தம்
காதை பிளந்தது
எங்கள் சொந்த கடை இல்லை என்பதால்
எரியாமல் கடை
இடிப்போடு தப்பியது.
சிங்கள நண்பருடன்
சென்றோம் முகாமுக்கு
வந்தோம் கப்பலில் வடக்கிற்கு
எப்படி மறக்க
எம் வாழ வாழ்வை அழித்த
ஆடி கலவரத்தை.
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சலீம் ஹஜியார்