சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு “பிறந்த மனை “மண்குடிசைதான் நான் பிறந்த மனை
ஆனால் மாஞ்சோலை
பொன்னார் வெளி என்ற
கிராமம்
பல்லவராஜன் மன்னன் ஆண்ட
பல்லவராயன் கட்டு பூநகிரி

பெரு முற்றம் நடுவே ஓலை வீடு
மண் குந்து பனை வரிச்சால்
வரிந்திருக்கும்
தாய் அறையும் பக்க அறையும்
மண்சுவர் முழுக்க
பக்க விறாந்தையிலே
களஞ்சிய பெரும் கூடையிலே
பச்சை பெருமாள் நெல்லு இருக்கும்
இடியப்பம் பலகாரம் என்று ஆக்கி உண்ண
இன்னும் ஒரு கூடையில்
மொட்டைக்கறுப்பன்
சோறாக்க
வளவு நிறைந்த காய்கறி
வயிற்றை என்றும் நிறப்பும் வளவு
கையில் காசு இராது
பண்டமாற்றாய் எதையும்
வாங்கலாம்
என் ஊரில் அந்த நாளில்
அக்கா அண்ணை மாமா என
பத்துப்பேர் மாலில் படுத்து உறங்குவோம்
பாசமாக
ஏர் உழுது வாழ்ந்தோம்
பஞ்ச வாழ்வு
போரும் வெளிநாடும்
போக்கடித்த இன்பம்.
ஆரை சொல்லி அழ.
சிவரஞ்சனி கலைச்செல்வன்