சந்தம் சிந்தும் சந்திப்பு 239 “ஆறு மனமே”
எப்படி மனம் ஆறும்
ஏராளம் கவலை மனதோடு
அறுபத்தி ஆறு அகவைக்குள்
அடங்கா கவலை மனதுக்குள்
ஆறு ஏழு தலைமுறையாய்
ஆச்சி வம்ச சீதனமாய்
ஆறு அறை வீடு
நாற்சார் வீடு நடு முற்றம்
போச்சு எல்லாமே
போராலே குண்டடியால்
கட்டிலோடு ஆச்சியை
கடசி மகளோடு விட்டு
இயக்கம் பிடித்து இருந்த இல்லம் .
போர் முடிந்து போக முன்னர்
பொலீசு நடேசு குந்தி
உறுதி தன்பேரில்
உள்ளதெண்டு வாதாட்டம்
இரு பார் எடு வருமானம் என்டு
இலண்டன் மகள் சொல்லி
பழுதுகளை சரி பாக்க பணம் அனுப்ப
காணி வீடு தன்ரை எண்டு
கணக்கு விடுகின்றான்
அதிகாரி ஆதரவு அவன் பக்கம்
தொலைஞ்ச உறுதியை எடுக்க அலைஞ்சு திரியிறன் கந்தோர் கந்தோராய்.
கனடாவால் வரப்போக
கனக்க செலவாகும்.
அக்கம் பக்கம் எல்லாம்
ஆராரோ புதுச்சனங்கள் .
எப்படி வாழ்ந்தம்
நாடு மீட்பமெண்டு
நம் பொடியள் செத்துதுகள்
வீடும் போய் நாடும் போய்
காடு போற வயது
கரைச்சல் தலைவிதியோ?
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-