சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

ஆற்றல்
அவரவர் முயற்சியில்
அயராத உழைப்பு
ஆற்றல் வெளிப்பாடு
அரிய பேர் விளைச்சல்
பாலை நிலத்தை
பச்சைப்படுத்த
ஆழத் தோண்டி
அதில் ஊறும் நீரை
கோலி துலாவால்
கொண்டோட வாய்க்கால்
பாத்தி என்றெல்லாம்
பயிரினை வளர்தோம்
இன்றுள்ள வசதி
எதும் இலா நிலமை
மாடு ஏர் பூட்டி
மண்ணை உழுது
பாலை நிலத்தை
பசும் நிலம் ஆக்கிய
ஆற்றல் மிகுந்த நம்
யாழ்ப்பாண ஆதி.