சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்-தவிப்பு

ஊரில் ஆமி கடற்புறம் இருக்க
போர் புலி வீரர் இப்பால் காவல்
இரவிரவாக ஷெல் வெடி கணைகள்
இல்லத்தாலே எழும்பாமல் நாங்கள்
பரம்பரை வீட்டில் பதுங்கி இருந்தோம்
எழும்பி ஓட முடியாத அம்மா
ஏராளம் உடைமை பாட்டி சொத்து
இன்றைக்கு முடியும் நாளைக்கு முடியும்
இந்தியா வருகை யுத்தம் முடியும்
கனவில் மிதந்தோம் காலாகாலம்
எதிரியாய் இருந்த இலங்கை ஆம்
ஒதுங்கி முகாமில் உள்ளே இருக்க
இந்தியன் ஆம் கையில் வடக்கில்
எல்லா பொறுப்பும் இருந்த காலம்.
பட்டினி போரில் திலீபன் சாக
சட்டென வெடித்த போரில் மடங்கி
எல்லாம் விட்டு இல்லத்தை விட்டு
இருந்த நகைகள் சீதன உறுதி
எடுத்துக்கொண்டு தவித்து ஓட்டம்
அம்மா இழுப்பில் வழியில் சாக
அங்கேயே தாட்டோம் அழ நேரம் இல்லை
பட்டினி, ஓட்டம் நித்திரை இல்லை
படுத்து உறங்க அடைப்பு அறை இல்லை
எத்தனை தவிப்பு?எவ்வளவு ஆயிரம்
சந்த நிகழ்வு கவிதை. செத்தவர் தொகையாய்
முப்பது ஆண்டில் முடிந்த யுத்தம்
என்னத்தை கண்டோம்
எல்லாம் இழந்து எங்கும் விகாரை
எமக்கென தலைவர் இல்லா தவிப்பு
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-