சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன் (மொழி)

ஒரறிவின் மேலான உயிரஇனத்துக்கெல்லாம்
உள்ள ஒலி எழுப்புகின்ற
நாக்கு என்ற உண்மை
பேசு மொழி உயிரினங்கள்
யாதுக்கும் உண்டு
பேருண்மை அவை அசைவால்
அறியும் உணர்வு கொண்டு
ஆறு அறிவு படைத்தோரே
மொழியறிவு மூலம்
அவரவர்க்கு எழுத்து பேச்சு
என வகுத்து யாத்தார்
சீரில் இயல்,இசையோடு
நாடகமும் கொண்டு
செம் மொழியாய் எம் மொழியும்
பண்டை தொட்டு நின்று
பேரெழிலாய் துலங்குவதில்
பெருமை மிக கொண்டோம்
பிறப்பு முதல் இறப்பினிலும்
தமிழ் ஒலித்து கொண்டோம்