சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

பூசுகின்ற திருநீறு
பூணுகின்ற காவி உடை
ஈசன் அடியான் என
எண்ண வைக்கும் தந்திரமே
லேசான வாழ்வென்று
லேகியத்தை நிதம் சப்பி
காசியிலே இருக்கின்றார் கனமாய்
வீசி காசு தந்து
விடைபெறட்டும் பாவம் என்று
பூசிப்பார் தயவு போதுமோ?
சாது என நடிக்காமல்
சாதல் மேல் நீ யோசி
வேத முதல் சைவ நீதி
விளங்க.