வியாழன் கவி 1658!
கோடை மழை!
இடியொடு மழையும் இனித்தது இங்கே
இரங்கியே வானது தந்தது நீரை
இறைத்திடும் நீரும் இறங்கியே வந்து
விரட்டிய வெம்மை விலகியே ஓட!
கோடையில் கொட்டும் மழைக்கு மகிமை
வாடிய பயிர்களும் துளிர்த்தது மேன்மை
அடங்காப் பசியென மண்ணின்
உணர்வு
உணர்ந்தே கிடைத்தது உளத்தில்
நிலைத்தது!
இடியும் மின்னலும் இணைந்த ஆற்றல்
விடியும் பொழுதினில் துளியின் தூறல்
இயற்கை தந்த இனிய பொழுது
இதற்கு இணையாய் எதுவோ உயர்வு!
சிவதர்சனி இராகவன்
21/7/2022