வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவிதை நேரம்!
கவி இலக்கம் 1638!

அன்றிட்ட தீ!

அன்றிட்ட தீ அணைத்துச் சாம்பலாக்கியது ஒன்றா இரண்டா
ஓராயிரம் நூல்களை அல்லவா!

அறிவுப் பசி தீர்க்கும் அட்சய
பாத்திரங்கள் அனலிடைக்
கருகியது எத்தனை கொடூரம்!

அரக்கத்தனத்தின் அதியுச்ச
ஆட்டம் அநீதி அகந்தை
அழித்தவர் எண்ணம் ஈடேறுமா!

வெட்ட வெட்டத் தழைக்கும்
ஆலவிருட்சமாய் எம் தலை
முறை எட்டுத் திக்குமாய்!

விழுந்தோம் எழுந்தோம்
விதைத்தோம் அறுவடை
செய்வோம் நம் ஆற்றலை!

நிழலாடும் நினைவுகளாய்
இன்றோ எழுந்து வீரமுடன்
காட்சிதருகிறாள் கலைமகள்!
சிவதர்சனி இராகவன்
8/6/2022