வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1609!
அதனிலும் அரிதாம்!

பெற்றோம் மானிடப் பிறப்பு – மண்ணில்
பெறற்கரிய பேறாம் யாவுள
ஈடாய்
சுத்தம் காத்தால் சுகமே தான்
உண்டாம்
நித்தம் காத்தால் நிலைக்கும்
இன்பம்!

சித்திரை ஏழில் முத்திரை பதித்ததாம்
இதற்கென ஒரு நாள் நிலைத்தே
கொண்டதாம்
உடலும் உள்ளமும் பேணும்
சுத்தம்
உலகில் நமை வெல்ல யாரால்
இயலும்!!

நோயும் பிணியும் நம்மவரை அண்டியே வாழும்
நிந்தனை செய்தே நித்தமும்
கொன்றே ஒழிக்கும்
மருந்து மாத்திரை இதனிடத்தே
தஞ்சம்
நிலைக்குமா வாழ்வியல் சொல்லவே
அச்சம்!!

அகத்தைப் புறத்தை மாசு நீக்கியே தினம்
அகந்தை அழித்து ஆன்மா காத்து
நித்தம்
நம்மை மட்டுமல்ல நம் சந்ததியும்
காப்போம்
நமை விட்டோடும் வரும் புதிய நோய்களெல்லாம்!!!
சிவதர்சனி இராகவன்
6/5/2022