வியாழன் கவிதை நேரத்துக்காக!
கவி 1605!
சிறப்புக்குழந்தைகள்!
படைப்பினில் பேதம் இல்லை என்றும்
படைத்தவன் யாரையும் வெறுப்பதும்
இல்லை
தரத்தினில் தங்கம் போல எங்கும்
காண்போம்
தரணி வாழ் குழந்தைகள் மேன்மை
உணர்வோம்!!
அன்னை கருவிலே தாங்கும் பெருமை
தந்தை தோள் ஏற்று சாற்றிடும்
புலமை
ஆற்றல் அறிவிலில் இவருக்கு ஈடிணையில்லை
அறிந்தே நடப்போம் இதுவும்
மானிட நிலை!!
தோற்றத்தில் செயலில் மாறுபாடு உண்டு
தொடரும் வார்த்தைகள் நமை
இழுப்பதுண்டு
இயற்கை நியதி துணையாவது கண்டு
விஞ்ஞானம் விதிகளை மாற்றுதலும்
உண்டு!!
பூக்களின் மென்மை இவர்கள்
உள்ளம்
பூமியில் காணலாம் அத்தனை
மேன்மை
சிறப்புக்குழந்தைகள் நாளொன்று
நாம் விழிக்க
சிந்தித்து நடப்போம் சிறப்பினை
படைப்போம்!!
30/3/2022
சிவதர்சனி இராகவன்