வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி 1601!

துளி நீர்!

உயிர்காக்கும் ஒரு துளி நீர்
உலகெங்கும் நிறைவது நீர்
அண்டங்கள் காக்கும் நீர்
அருந்திட மகிமை தண்ணீர்!

உயிர் கருவாகும் துளி நீர்
உணர்வினைப் பகிரும் கண்ணீர்
கன்னத்தில் கோடிடும் நீர்
கனிந்திடும் அன்பைப் பகிரும் நீர்!

வான்மழை தருமொரு துளி நீர்
வண்ண நீலக் கடல் வீழ்ந்திடும்
ஆழி முத்தாய் அவதரிக்கும் அது
ஆண்டவன் முடியை அலங்கரிக்கும்!

பசுமை தழைக்க வேண்டுமே
பாரும் செழிக்க வேண்டுவதே
கார்முகில் தருவரம் வேண்டுதலில்
கரைந்தே வருவது நீர்வரமே!!

உப்புக்கல்லின் உருவாக்கம்
உணவின் அறுசுவை ஒன்றாகும்
தப்பிப் பிழைக்க ஒரு துளியும்
தருமே வானவில் தருணமதில்!
சிவதர்சனி இராகவன்
23/3/2022